கொரோனா பாதிப்பு: மராட்டியத்தில் 23 பேர் உயிரிழப்பு


கொரோனா பாதிப்பு: மராட்டியத்தில் 23 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 15 Jan 2022 4:33 PM GMT (Updated: 2022-01-15T22:03:12+05:30)

மராட்டியத்தில் மேலும் 125-பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 42,462- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 441- ஆக உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 23  பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 39,646- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 67.60 லட்சமாக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் தொற்று மீட்பு விகிதம் 94.28 சதவிகிதமாக உள்ளது. 

அதேபோல், மராட்டியத்தில் மேலும் 125-பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,730-ஆக உயர்ந்துள்ளது.

Next Story