பொது போக்குவரத்து பாதிப்பு; கலெக்டரை கடிந்து கொண்ட முதல்-மந்திரி


பொது போக்குவரத்து பாதிப்பு; கலெக்டரை கடிந்து கொண்ட முதல்-மந்திரி
x
தினத்தந்தி 15 Jan 2022 8:32 PM GMT (Updated: 2022-01-16T02:02:58+05:30)

ஆம்புலன்ஸ் உள்பட வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதற்காக கலெக்டரை அசாம் முதல்-மந்திரி கடிந்து கொண்டார்.


நகாவன்,


அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா நகாவன் மாவட்டத்தில் அடிக்கல் நாட்டு விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.  இதனை முன்னிட்டு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

இதுபற்றி அறிந்த பிஸ்வாஸ், நகாவன் மாவட்ட கலெக்டரை அழைத்து, கடிந்து கொண்டார்.  என்னுடைய வருகையால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்த கூடாது.  15 நிமிடங்கள் வரை, ஆம்புலன்ஸ் உள்பட வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

இன்றைய அசாமில் இந்த வி.ஐ.பி. கலாசாரத்திற்கு இடம் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின் தொடர்ந்து பேசிய அவர், எந்தவொரு அரசு பணியாளரும் அல்லது மக்கள் பிரதிநிதியும் மக்களுக்காகவே பணியாற்றுவார்கள் என்ற கலாசாரம் உருவாகவே அசாம் அரசு விரும்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.  இதன்பின், பேருந்து ஓட்டுனர்களிடம் தொடர்ந்து பயணம் செய்யுங்கள் என கூறினார்.
Next Story