குடியரசு தின விழா; 24 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி


குடியரசு தின விழா; 24 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி
x
தினத்தந்தி 15 Jan 2022 11:09 PM GMT (Updated: 2022-01-16T04:39:10+05:30)

டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 24 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.புதுடெல்லி,நாடு முழுவதும் குடியரசு தினம் ஆண்டுதோறும் வருகிற ஜனவரி 26ந்தேதி கொண்டாடப்படும்.  இதனை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் விழாவில் 1.25 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள்.  கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 25 ஆயிரம் பேர் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல் இந்தாண்டும் டில்லியில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.  இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, இந்தாண்டு குடியரசு தின விழாவில் 24 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படும். இதில் 19 ஆயிரம் பேர் மத்திய அரசின் அழைப்பின் அடிப்படையில் பங்கேற்பர். பொதுமக்கள் 5 ஆயிரம் பேர் டிக்கெட் பெற்று கொண்டு கலந்து கொள்வார்கள். இந்தாண்டு வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிவித்து உள்ளனர்.


Next Story