சமாஜ்வாடி கட்சியில் இணைந்த முன்னாள் மந்திரி- பாஜகவுக்கு மேலும் பின்னடைவு


சமாஜ்வாடி கட்சியில் இணைந்த முன்னாள் மந்திரி- பாஜகவுக்கு மேலும் பின்னடைவு
x
தினத்தந்தி 16 Jan 2022 9:48 AM GMT (Updated: 16 Jan 2022 9:48 AM GMT)

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மந்திரிசபையில் இருந்து அடுத்தடுத்து மந்திரிகள் ராஜினாமா செய்து வருவது ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7-ந் தேதிவரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க.வும், கைப்பற்ற எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியும் வரிந்து கட்டுகின்றன.

இந்த நிலையில், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மந்திரிசபையில் இருந்து அடுத்தடுத்து மந்திரிகள் ராஜினாமா செய்து வருவது  ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில், பாஜகவுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக முன்னாள் மந்திரியும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடையே செல்வாக்கு மிக்க தலைவராகவும் விளங்கிய தாரா சிங் சவுகான் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். 

தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருவது பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் (எஸ்) கட்சியின் எம்எல்ஏ வர்மாவும் இன்று சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.


Next Story