கர்நாடகாவில் ஜெட் வேகத்தில் உயரும் தினசரி கொரோனா பாதிப்பு


கர்நாடகாவில் ஜெட் வேகத்தில் உயரும் தினசரி கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 16 Jan 2022 3:48 PM GMT (Updated: 16 Jan 2022 3:48 PM GMT)

கர்நாடகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்டியதால் சுகாதாரத்துறை கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 470 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 34 ஆயிரத்து 47 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெங்களூருவில் 21 ஆயிரத்து 71 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 32 லட்சத்து 20 ஆயிரத்து 87 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 5 ஆயிரத்து 902 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இதுவரை 29 லட்சத்து 83 ஆயிரத்து 645 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 982 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நேற்று  32,793 பேர் பாதிக்கப்பட்டனர்.  இன்று  ஒரு நாள் பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் சுகாதாரத்துறை கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது. 


Next Story