டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் 28 சதவீதமாக குறைந்தது


டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் 28 சதவீதமாக குறைந்தது
x
தினத்தந்தி 16 Jan 2022 4:31 PM GMT (Updated: 16 Jan 2022 4:31 PM GMT)

டெல்லியில் கடந்த 2 தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. டெல்லியில் நேற்றைய பாதிப்பு 20,718- ஆக பதிவான நிலையில் இன்று தொற்று பாதிப்பு 18,286- ஆக குறைந்துள்ளது மக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

 அந்த வகையில்  தொற்று பாதிப்பு நேற்றை விட இன்று 13 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பு விகிதமும் 27.87 சதவிகிதமாக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 89, 819- ஆக உள்ளது.  டெல்லியில்  கடந்த வெள்ளிக்கிழமை 24,383- பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதிப்பு விகிதம் அன்றைய தினம் 30.64- சதவிகிதமாக இருந்தது. உயிரிழப்பு 34 ஆக பதிவாகி இருந்தது. 

Next Story