இந்தியாவில் கொரோனா 3-ம் அலை உச்சம் தொட்டுள்ளதா? - நிபுணர் பதில்


இந்தியாவில் கொரோனா 3-ம் அலை உச்சம் தொட்டுள்ளதா? - நிபுணர் பதில்
x
தினத்தந்தி 17 Jan 2022 12:52 AM GMT (Updated: 17 Jan 2022 12:52 AM GMT)

இந்தியாவில் தொடர்ந்து தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த தருணத்தில் பிரபல நச்சுயிரியல் நிபுணர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், "கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது உச்சம் தொட்டுவிட்டதா?" என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், 

"இந்தியாவில் கொரோனா பாதிப்பு முதலில் மெட்ரோ நகரங்களில்தான் தொடங்கியது. எனவே முதலில் அங்குதான் முடியும்" என பதில் அளித்தார்.

மேலும் அவர் கூறும்போது, "ஒமைக்ரான், சட்டத்துக்கு புறம்பானது ஒமைக்ரான் என்பது நோய் தொற்று முன்னேற்றத்தில் இருந்து ஒரு விலகல் ஆகும். 2 தொற்றுநோய்கள் அருகருகே உள்ளன. ஒன்று டெல்டா மற்றும் நெருங்கிய உறவினர்கள். மற்றொன்று சமீபத்திய கவலைக்குரிய வைரஸ் (ஒமைக்ரான்)" என கூறினார்.

Next Story