தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது - மத்திய அரசு


தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது - மத்திய அரசு
x
தினத்தந்தி 17 Jan 2022 5:05 AM GMT (Updated: 17 Jan 2022 5:05 AM GMT)

தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பொதுஇடங்களில் இடங்களில் காண்பிக்கும் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்றை கருத்தில் கொண்டே பொதுமக்கள் நலன் கருத்தி தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பத்திரிக்கை, சமூகவலைதளம் மற்றும் தொலைக்காட்சி உள்பட பல்வேறு வழிமுறைகள் மூலம்  நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. 

ஆனால், தனிப்பட்ட நபரின் விருப்பத்திற்கு மாறாக யாரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. எந்த வித நடவடிக்கைக்கும் தடுப்பூசி சான்றிதலை வைத்திருக்க வேண்டும் என எந்த விதிமுறைகளையும் மத்திய அரசு விதிக்கவில்லை  


Next Story