பாலியல் வன்கொடுமை செய்து ஆழ கிணற்றில் வீசப்பட்ட சிறுமி கம்பியை பிடித்து உயிர்தப்பினார்...!


பாலியல் வன்கொடுமை செய்து ஆழ கிணற்றில் வீசப்பட்ட சிறுமி  கம்பியை பிடித்து உயிர்தப்பினார்...!
x
தினத்தந்தி 17 Jan 2022 6:06 AM GMT (Updated: 2022-01-17T11:36:10+05:30)

பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் வீசப்பட்ட சிறுமி கம்பியை பிடித்து உயிர்தப்பியுள்ளார்.

போபால்,

மத்தியப்பிரதேசம் செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல் வெளி பக்கம் சென்ற போது அந்தச் சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இதையடுத்து சிறுமி தன்னை காட்டிக் கொடுத்துவிட கூடாது என்பதற்காக சிறுமியை அருகில் இருந்த கிணற்றில் தள்ளி விட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். சிறுமி கிணற்றில் தள்ளி விட்டதும் அங்கிருந்து அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். 

கிணற்றில் விழுந்த சிறுமி கிணற்றிலிருந்த கம்பியை பிடித்து உயிர் தப்பியுள்ளார். அந்த கம்பியின் உதவியுடன் கிணற்றின் மேலேறி வந்த சிறுமி வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். 

அந்த புகாரின் பேரில் போலீசார் அந்த குற்றவாளியை நேற்று கைது செய்தனர். அந்த குற்றவாளியின் மேல் கற்பழிப்பு மற்றும் குழந்தை வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Next Story