நோயாளி மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை


நோயாளி மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 17 Jan 2022 6:44 AM GMT (Updated: 2022-01-17T12:14:54+05:30)

வயதான காலத்தில் நோயாளி மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மூணாறு,

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டம் குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (80), இவர் விவசாய தொழில் செய்து வந்தார். இவர் மனைவி லீலாம்மா (75), இந்த தம்பதிகளுக்கு 5 மகள்கள் உள்ளனர். திருமணமாகி அனைவரும் பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர், 

ஜோசப் மனைவி உடல்நிலை பாதித்து கடந்த 10 ஆண்டுகளாக படுக்கை நோயாளியாக இருந்து வருகிறார், மனைவியைக் ஜோசப்தான் பார்த்து வந்தார், கடந்த சில மாதங்களாக வயதான காரணத்தால் மனைவியை சரிவர கவனிக்க ஜோசப்பால் முடியவில்லை.

நேற்று  வீட்டு சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ஜோசப் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டனர் அப்பகுதியில் உள்ளவர்கள். 

உடனே இது குறித்து நெடுமுடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர், போலீஸ் வந்து ஜோசப் உடலை கைப்பற்றி வீட்டுக்குள் சோதனை மேற்கொண்டனர், அப்போது ஜோசப் மனைவி லீலாம்மா ஒரு அறையில் இறந்து கிடப்பதை போலீஸ் கண்டனர். 

மனைவியை கொலை செய்துவிட்டு நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன், என ஜோசப் கடிதம் எழுதி வைத்து உள்ளார். இருவர் உடல்களையும் நெடுமுடி போலீஸ் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Next Story