தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 12,587- பேருக்கு கொரோனா- நேற்றை விட 31 சதவீதம் குறைந்தது + "||" + Positivity Rate Stays At 28% In Delhi, 12,587 New Cases, 31% Drop From Sunday

டெல்லியில் மேலும் 12,587- பேருக்கு கொரோனா- நேற்றை விட 31 சதவீதம் குறைந்தது

டெல்லியில் மேலும் 12,587- பேருக்கு கொரோனா- நேற்றை விட 31 சதவீதம் குறைந்தது
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 12,587- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில்  கடந்த 24 மணி நேரத்தில் 12,587- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு நேற்றை விட இன்று 31 சதவீதம் குறைந்துள்ளது. எனினும், பரிசோதனைகளும் நேற்றை விட இன்று குறைந்துள்ளது. 

டெல்லியில் நேற்று 18,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தொற்று பாதிப்பு விகிதம் 28 சதவீதமாக உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. 

டெல்லியில் சனிக்கிழமை  20,718- பேருக்கு தொற்று உறுதியானது. வெள்ளிக்கிழமை 24,383- பேருக்கு தொற்று ஏற்பட்டது. வியாழக்கிழமை 28,867- பேருக்கு தொற்று  பாதிப்பு பதிவாகியிருந்தது.  டெல்லியில் தடுப்பூசி போட தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 80 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் புதிதாக 377 பேருக்கு கொரோனா; மேலும் 910 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கடும் வெப்பத்தால் டெல்லியைச் சுற்றி வெப்பத் தீவுகள் உருவாகின்றன - நாசா எச்சரிக்கை!
டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைவாக பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.250ஆக குறைப்பு..!!
கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.840லிருந்து ரூ.250ஆக குறைக்கப்பட்டுள்ளது.
4. டெல்லியில் வரலாறு கானாத வெப்பநிலையால் மக்கள் கடும் அவதி
தலைநகர் டெல்லியில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
5. டெல்லி தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டிட உரிமையாளர் கைது
டெல்லியில் 27 பேர் தீ விபத்தில் உயிரிழந்த நிலையில், தலைமறைவாக இருந்த கட்டிட உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.