மேற்கு வங்காளத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு


மேற்கு வங்காளத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2022 5:19 PM GMT (Updated: 2022-01-17T22:49:50+05:30)

மேற்கு வங்காளத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  இந்த நிலையில், அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதன்படி, உடற்பயிற்சி கூடங்கள் 50% நபர்களுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.  திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான வெளியூர் படப்பிடிப்புகளை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடித்து நடத்தி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

முக கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் சுகாதாரம் ஆகியவை அனைத்து நேரங்களிலும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story