டெல்லியில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி சாதனை..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Jan 2022 8:26 PM GMT (Updated: 2022-01-18T01:56:48+05:30)

டெல்லியில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

டெல்லியில் கொரோனா வைரசுக்கு எதிராக தகுதி வாய்ந்த அனைவருக்கும் (100 சதவீதம்) தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 80 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு விட்டன. 

1 லட்சத்து 28 ஆயிரம் முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகள் மூத்த குடிமக்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 36 ஆயிரம் பேர் மூத்த குடிமக்கள் ஆவர். 

டெல்லியில் மொத்தம் 2.85 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த தகவல்களை டெல்லி சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் நேற்று வெளியிட்டார். டெல்லியில் தொற்று பரவல் தற்போது தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Next Story