தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருக்கலாம்: அசாம் முதல்-மந்திரி பேச்சு


தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருக்கலாம்: அசாம் முதல்-மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 18 Jan 2022 2:04 AM GMT (Updated: 2022-01-18T07:34:12+05:30)

தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம் என்று அசாம் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி,

சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தனிப்பட்ட நபரின் விருப்பத்திற்கு மாறாக யாரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. 

எந்த வித நடவடிக்கைக்கும் தடுப்பூசி சான்றிதலை வைத்திருக்க வேண்டும் என எந்த விதிமுறைகளையும் விதிக்கவில்லை' என மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம் என்று அசாம் முதல்-மந்திரி ஹேம்நாத் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமில்லை. ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் கூட்டங்களில் பங்கேற்க முடியாது. அலுவலகங்கள், உணவகங்களுக்குள் நுழைய முடியாது. தடுப்பூசி செலுத்த விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம். அசாமில் தேவைப்பட்டால் மக்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டும்’ என்றார்.     

Next Story