மோடியை என்னால் அடிக்க முடியும் - காங்கிரஸ் தலைவர் பேச்சு


மோடியை என்னால் அடிக்க முடியும் - காங்கிரஸ் தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 18 Jan 2022 4:05 AM GMT (Updated: 18 Jan 2022 4:05 AM GMT)

மோடியை என்னால் அடிக்க முடியும், அவமானப்படுத்தமுடியும் என்று மராட்டிய காங்கிரஸ் தலைவர் பேசியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே. இவர் ‘என்னால் மோடியை அடிக்க முடியும், அவமானபடுத்த முடியும்’ என்று பேசும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. 

இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பாஜக செய்தித்தொடர்பாளர் ஷிஷாத் பூனாவாலா, பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி ஒரு சதித்திட்டம் என்பது தற்போது உங்களுக்கு தெரியும்’ என பதிவிட்டுள்ளார்.

மோடியை என்னால் அடிக்க முடியும் என காங்கிரஸ் தலைவர் கூறுவது போன்ற வீடியோ மராட்டிய அரசியலில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பரபரப்பானது.

இந்நிலையில், தான் பிரதமர் மோடியை பற்றி கூறவில்லை என்று காங்கிரஸ் தலைவர் நானா படோலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நானா படோலா, தனது தொகுதியில் உள்ள ஒரு உள்ளூர் ரவுடியின் பெயர் மோடி எனவும் அவரை பற்றியே தான் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நானா படோலா கூறுகையில், நான் எனது தொகுதியில் மோடி என பெயருடைய உள்ளூர் ரவுடி குறித்தே அவ்வாறு பேசினேன். பிரதமர் பதவியின் மரியாதை குறித்து எனக்கு நன்கு தெரியும். நான் பிரதமர் மோடிக்கு எதிராக பேசவில்லை’ என்றார்.  

Next Story