55 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டு சிறை


Image Courtesy: Reuters
x
Image Courtesy: Reuters
தினத்தந்தி 18 Jan 2022 6:12 AM GMT (Updated: 2022-01-18T11:42:31+05:30)

பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் லங்கல்சிலா என்ற கிராமத்தை 55 வயது பழங்குடியின பெண் 2017-ம் ஆண்டு இரு நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இந்த கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அஜித் குமார் கிரி (35), பலராம் நாயக் (25) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மயூர்பஞ்ச் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்பு வெளியானது.

அதில், பழங்குடியின பெண்ணை பாலியல் அஜித் குமார் கிரி மற்றும் பலராம் நாயக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. 

இதனையடுத்து, குற்றவாளிகள் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. மேலும், குற்றவாளிகள் இருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.   

Next Story