டெலிபிராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை: மோடியை கலாய்த்த ராகுல் காந்தி


டெலிபிராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்றுக்கொள்ள  முடியவில்லை: மோடியை கலாய்த்த ராகுல் காந்தி
x
தினத்தந்தி 18 Jan 2022 12:48 PM GMT (Updated: 2022-01-18T18:18:42+05:30)

'டெலிப்ராம்ப்டரால் கூட இவ்வளவு பொய்களை ஏற்க முடியவில்லை' என பிரதமரின் உரையை ராகுல் காந்தி கிண்டலடிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. காணொலி வாயிலாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் உரையாற்றி வருகின்றன. 

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக உரையாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது டெலிபிராம்ப்டர் இயந்திரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், பிரதமர் மோடி தனது பேச்சை நிறுத்தினார்.   

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இதுகுறித்து தனது  டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை சாடியுள்ளார். இது குறித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது; பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றார். 

Next Story