டெல்லியில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு


டெல்லியில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2022 1:45 PM GMT (Updated: 18 Jan 2022 1:45 PM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 11,684- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த  24 மணி நேரத்தில் 11,684- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பு விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 22 சதவீதம் குறைந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 17,516- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

எனினும் கவலை அளிக்கும் விதமாக கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 38- பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில்  திங்கள் கிழமை 12,587- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

ஞாயிற்றுக்கிழமை 18 ஆயிரம் பேருக்கும், சனிக்கிழமை 20 ஆயிரம் பேருக்கும் வெள்ளிக்கிழமை 24 ஆயிரம் பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.  டெல்லியில் ஜெட் வேகத்தில் உயர்ந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியிருப்பது மக்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது. 

Next Story