கர்நாடகாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,457 பேருக்கு தொற்று..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Jan 2022 5:23 PM GMT (Updated: 2022-01-18T22:53:01+05:30)

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,457 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதன்படி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,457 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்படோரின் மொத்த எண்ணிக்கை 32,88,700 ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 20 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 38,465 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,353 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் கொரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 29,99,825 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 2,50,381 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெங்களுருவில் மட்டும் 25,595 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story