ஆந்திராவில் இன்று மேலும் 10,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆந்திராவில் இன்று மேலும் 10,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 19 Jan 2022 1:50 PM GMT (Updated: 2022-01-19T19:20:26+05:30)

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவீர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இன்று ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று மேலும் 10,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,27,441 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 1,222 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 20,67,984 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் இதுவரை 14,422 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 44,935 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்..

Next Story