கணவன் தலையுடன் போலீஸ் நிலையம் வந்த பெண்;போலீசார் அதிர்ச்சி


கணவன் தலையுடன் போலீஸ் நிலையம் வந்த பெண்;போலீசார் அதிர்ச்சி
x
தினத்தந்தி 20 Jan 2022 11:35 AM GMT (Updated: 2022-01-20T17:05:37+05:30)

குடும்பப் பிரச்சினை காரணமாக கணவனை மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேனிகுண்டா,

ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தில் குடும்பப் பிரச்சினையில் கணவனை மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேனிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள்  ரவிச்சந்திரன் (வயது 53) மற்றும் மனைவி வசுந்தரா (வயது 50). இவர்கள் இருவருக்குள்ளும் கடந்த சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று அவர்கள் இருவரிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதைத்தொடர்ந்து ரவிச்சந்திரனை வசுந்தரா கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். ரவிச்சந்திரன் இறந்ததை அடுத்து வசுந்தரா வீட்டை விட்டு தலையுடன் வெளியே சென்றுள்ளார். இரத்தக் கறைகளுடன் வசுந்தரா சென்றதை கண்டு பயந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வசுந்தரா தன் கணவனை கழுத்தறுத்து கொன்றதை கண்டறிந்துள்ளனர்.  வசுந்தராவை கைது செய்த போலீசார் வசுந்தரா மனநலம் பாதித்தவர் என்றும் அவர்கள் இருவருக்கும் 20 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். மேலும்  வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.

Next Story