தேசிய செய்திகள்

கோவாவில் அதிகரிக்கும் கொரோனா; இன்று 3,390 பேருக்கு தொற்று உறுதி + "||" + Increasing corona in Goa; Today 3,390 people are confirmed infected

கோவாவில் அதிகரிக்கும் கொரோனா; இன்று 3,390 பேருக்கு தொற்று உறுதி

கோவாவில் அதிகரிக்கும் கொரோனா; இன்று 3,390 பேருக்கு தொற்று உறுதி
கோவாவில் இன்று ஒரே நாளில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பனாஜி,

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் கோவாவிலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அதன்படி இன்று ஒரே நாளில் அங்கு 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,22,497 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் 3,728 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் கோவாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,96,452 ஆக அதிகரித்துள்ளது. இன்று 9 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,585 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோவாவில் 22,460 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.36 கோடி ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது.
2. கொரோனாவால் மிரளும் வட கொரியா...தென் கொரியா உதவ முன்வந்தும் ஏற்க மறுப்பு
கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள வடகொரியா போதிய சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையில் தள்ளாடி வருகிறது.
3. டெல்லியில் சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 393 பேருக்கு தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் புதிதாக 377 பேருக்கு கொரோனா; மேலும் 910 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. வடகொரியாவில் மேலும் 15 பேர் கொரோனாவால் பலி: தென்கொரியாவின் தடுப்பூசி உதவியை ஏற்குமா?
வட கொரியாவில் மேலும் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தென்கொரியாவின் தடுப்பூசி உதவிகளை வடகொரியா ஏற்று பேரழிவை தடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.