பா.ஜ.க வில் இணைந்த பிறகு மாமனாரிடம் ஆசி பெற்ற அபர்ணா..!


பா.ஜ.க வில் இணைந்த பிறகு மாமனாரிடம் ஆசி பெற்ற அபர்ணா..!
x
தினத்தந்தி 21 Jan 2022 8:59 AM GMT (Updated: 2022-01-21T14:29:15+05:30)

பா.ஜ.க வில் இணைந்த பிறகு அபர்ணா யாதவ் மாமனார் முலாயம்சிங் யாதவிடம் ஆசி பெற்றார்.

லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி முதல் தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை  7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி - பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலைவி வரும் சூழ்நிலையில் முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்னா யாதவ் பா.ஜ.க.வில் இணைந்துள்ள சம்பவம் உத்தரபிரதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜனதாவில் சேர்ந்த பிரகு மாமனாரான முலாயம் சிங் யாதவிடம் ஆசி பெற டெல்லிருந்து லக்னோவிற்கு திரும்பினார் .

முலாயம் சிங் யாதவின் பாதம் தொட்டு ஆசிபெறும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அபர்ணா யாதவ். பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு மாமனாரிடம் ஆசி பெறுவதற்காக லக்னோ திரும்பியுள்ளேன். 

விமான நிலையத்தில் பா.ஜ கட்சியின் சார்பாக எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது என்று அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.

Next Story