மேகாலயா முதல்-மந்திரிக்கு மீண்டும் கொரோனா


மேகாலயா முதல்-மந்திரிக்கு மீண்டும் கொரோனா
x
தினத்தந்தி 21 Jan 2022 1:48 PM GMT (Updated: 2022-01-21T19:18:11+05:30)

மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.ஷில்லாங்,


மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மா தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  தேவையான காலத்திற்கு என்னை நான்  தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.

லேசான அறிகுறிகள் எனக்கு உள்ளன.  கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களுடைய அறிகுறிகளை கண்டறிந்தும், தேவைப்பட்டால் பரிசோதனையும் செய்து கொள்ளும்படியும் கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் சங்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.  இந்த நிலையில், அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


Next Story