பீகாரில் விஷ சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு


பீகாரில் விஷ சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 Jan 2022 3:24 PM GMT (Updated: 2022-01-21T20:54:18+05:30)

பீகாரில் விஷ சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.


சரண்,


பீகாரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் அனைத்து வித சாராயத்திற்கும் முழு அளவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், பீகாரின் சரண் மாவட்டத்தில் மேக்கர் மற்றும் ஆம்னர் ஆகிய கிராம பகுதிகளில் விஷ சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுதவிர பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடந்த ஒரு வாரத்திற்கு முன் நாலந்தாவில் 11 பேர் விஷ சாராயத்திற்கு உயிரிழந்த சூழலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Next Story