எங்கள் ஆட்சியில் 2 முதல்-மந்திரிகள், 3 துணை முதல்-மந்திரிகள்... ஓவைசி அறிவிப்பு


எங்கள் ஆட்சியில் 2 முதல்-மந்திரிகள், 3 துணை முதல்-மந்திரிகள்... ஓவைசி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2022 10:14 AM GMT (Updated: 22 Jan 2022 10:14 AM GMT)

உத்தர பிரதேசத்தில் நாங்கள் ஆட்சியை பிடித்தால் 2 முதல்-மந்திரிகள் மற்றும் 3 துணை முதல்-மந்திரிகள் இருப்பார்கள் என ஓவைசி கூறியுள்ளார்.


லக்னோ,

உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ந்தேதி முதல் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன.

இதேபோன்று, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் தேர்தல் போட்டியில் ஈடுபட்டு உள்ளது.  அந்த கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி இன்று கூறும்போது, உத்தர பிரதேசத்தில், எங்களுடைய கட்சி பாபு சிங் குஷ்வஹா மற்றும் பாரத் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.

உத்தர பிரதேசத்தில் எங்களுடைய கூட்டணி அதிகாரத்திற்கு வந்து ஆட்சியை பிடித்தால், ஓ.பி.சி. சமூகத்தில் இருந்து ஒருவர் மற்றும் தலித் சமூகத்தில் இருந்து மற்றொருவர் என 2 முதல்-மந்திரிகளும் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் உள்பட 3 துணை முதல்-மந்திரிகளும் இருப்பார்கள் என கூறியுள்ளார்.


Next Story