கர்நாடகாவில் மேலும் 42,470- பேருக்கு கொரோனா


கர்நாடகாவில் மேலும் 42,470- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Jan 2022 5:01 PM GMT (Updated: 22 Jan 2022 5:01 PM GMT)

கடந்த சில தினங்களாக பெங்களூருவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் இன்று 2 லட்சத்து 19 ஆயிரத்து 699 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 42 ஆயிரத்து 470 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 17 ஆயிரத்து 266 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை 19.33 சதவீதமாக உள்ளது.

கடந்த சில தினங்களாக பெங்களூருவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்தது. ஆனால் இன்று பெங்களூருவில் பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து 17,266 ஆக பதிவாகி இருந்தது. இது அரசுக்கு சற்று நிம்மதியை கொடுத்தாலும் மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்து இருப்பது அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Next Story