போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படாததால் அதிருப்தி: பாஜகவில் இருந்து விலகுவதாக பர்சேகர் அறிவிப்பு


போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படாததால் அதிருப்தி: பாஜகவில் இருந்து விலகுவதாக பர்சேகர் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2022 6:33 PM GMT (Updated: 2022-01-23T00:03:31+05:30)

கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.

பானஜி,

கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு கடும் சவால் இருக்கும் எனத்தெரிகிறது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ்,, சிவசேனா- என்.சிபி ஆகிய கட்சிகளால் கடும் போட்டியை பாஜக எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில், அண்மையில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

இதில், மூத்த தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான லக்‌ஷ்மிகாந்த் பர்சேகருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அவர், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பர்சேர்கர் கூறுகையில், “ பாஜகவில் நீடிக்க விரும்பவில்லை அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பது பின்னர் முடிவு செய்வேன்’’ எனக் கூறினார்.

Next Story