மாயமான அருணாச்சலப்பிரதேச சிறுவன் சீன ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்


மாயமான அருணாச்சலப்பிரதேச  சிறுவன் சீன ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்
x
தினத்தந்தி 23 Jan 2022 10:17 AM GMT (Updated: 23 Jan 2022 10:17 AM GMT)

காணாமல் போன சிறுவனை சீன ராணுவம் கண்டுபிடித்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

புது டெல்லி 

கடந்த ஜனவரி 20-ம் தேதி மிரம் தரோன் என்ற 17 வயது சிறுவன் வேட்டையாடுவதற்காக வெளியே சென்றபோது, சீன ராணுவம் அவனை கடத்தி சென்றுள்ளதாக புகார் எழுந்தது. சீன வீரர்கள் இந்திய பகுதிக்குள்ளே நுழைந்து அவனை கடத்தியதாக தகவல்கள் வெளியாகின.  

மேல் சியாங் மாவட்டத்தின் ஜிடோ கிராமத்தில் வசிக்கும் மிரன் தரோன், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் வேட்டையாடச் சென்ற போது சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த சிறுவன் வழிதவறி சீன பகுதிக்குள் நுழைந்திருந்தால், உடனே ஒப்படைக்குமாறு சீனாவுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் காணாமல் போன சிறுவனை சீன ராணுவம் கண்டுபிடித்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே மாயமான  17 வயது சிறுவன் மிராம் தரோமை சீன ராணுவம் கண்டுபிடித்துள்ளதாகவும், அவரைப் பற்றிய தகவல் அறியவும் அவரை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கவும் சீன ராணுவத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது," என்று இந்திய ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். 

Next Story