பெங்களூருவில் 165 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு- மந்திரி சுதாகர் தகவல்


பெங்களூருவில் 165 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு- மந்திரி சுதாகர் தகவல்
x
தினத்தந்தி 23 Jan 2022 1:17 PM GMT (Updated: 23 Jan 2022 1:17 PM GMT)

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது.

பெங்களூரு, 

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கொரோனாவுடன், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், பெங்களூருவில் கொரோனா பரவல் பீதி ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், பெங்களூருவில் ஒரே நாளில் புதிதாக 165 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நேற்று தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பெங்களூருவில் புதிதாக 165 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்களின் எண்ணிக்கை 931 ஆக உயர்ந்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story