தேசிய பேரிடர் படையை நாம் வலுபடுத்தி உள்ளோம், நவீன படுத்தி உள்ளோம்- நேதாஜி சிலை திறப்பு நிகழ்வில் பிரதமர் பேச்சு


தேசிய பேரிடர் படையை நாம் வலுபடுத்தி உள்ளோம், நவீன படுத்தி உள்ளோம்- நேதாஜி சிலை திறப்பு நிகழ்வில் பிரதமர் பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2022 1:48 PM GMT (Updated: 23 Jan 2022 5:34 PM GMT)

சுதந்திர இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் இலக்கை இன்று நாம் கொண்டுள்ளோம் என்று பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

நேதாஜியின் 125-வது பிறந்த நாளையொட்டி லேசர் முறையில் முப்பரிமாண சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை திறந்து வைத்த பின்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-   

இந்தியர்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்களைப்பை அளித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். கடுமையான சோதனைகள் சந்தித்த போதும் பிரிட்டிஷ் அரசுக்கு அடிபணிய மறுத்தவர். நேதாஜிக்கு கிரானைட்டில் சிலை அமைக்கப்பட்டவுடன் இந்த லேசர் சிலை அகற்றப்படும். நேதாஜியின் சிலை, ஜனநாயக மதிப்புகளுக்கும் வருங்கால தலைமுறையினரையும் ஊக்குவிக்கும் வகையில் அமையும்.  சுதந்திர இந்தியா என்ற  நம்பிக்கையை ஒரு போதும் இழக்கக் கூடாது. இந்தியாவை அசைக்க உலகில் எந்த சக்தியும் இல்லை. சுதந்திர இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் இலக்கை இன்று நாம் கொண்டுள்ளோம்.

இந்தியா 100- சுதந்திர தினம் கொண்டாடும் 2047- ஆம் ஆண்டுக்கு முன்பாக புதிய இந்தியாவை கட்டமைக்கும் இலக்கு நம்மிடம் உள்ளது. இதற்கு முன்பு பேரிடர் மேலாண்மை துறை விவசாய துறையால் கையாளப்பட்டது. தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை துறையை நமது அரசு வலுப்படுத்தியுள்ளது. பேரிடர் மேலாண்மை துறையில் நமது அரசு மேற்கொண்ட பூர்வாங்க வேலைகளை சர்வதேச சமூகம் பாராட்டியுள்ளது” என்றார். 


Next Story