சரத்பாவருக்கு கொரோனா தொற்று..!


சரத்பாவருக்கு கொரோனா தொற்று..!
x
தினத்தந்தி 24 Jan 2022 9:52 AM GMT (Updated: 2022-01-24T15:22:43+05:30)

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.  

இதனிடையே கொரோனா பாதிப்பால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு இன்று கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றனர் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story