உத்தர பிரதேச முதல் கட்ட தேர்தல்; காங். கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு


உத்தர பிரதேச முதல் கட்ட தேர்தல்; காங். கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 24 Jan 2022 3:00 PM GMT (Updated: 2022-01-24T20:34:55+05:30)

உத்தர பிரதேச முதல் கட்ட தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நாட்டிலேயே பெரிய மாநிலம் என்பதால் உத்தர பிரதேசம் தேர்தல் நாடு முழுவதும்  உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. 

உத்தர பிரதேசத்தில் முதல்கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக 30 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

Next Story