மும்பையில் 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் தீ விபத்துகள்: புள்ளிவிபரம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Jan 2022 6:26 PM GMT (Updated: 24 Jan 2022 6:26 PM GMT)

மும்பையில் கடந்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.

மும்பை,

மும்பையில் கடந்த 2017 முதல் தீ விபத்து தொடர்பான 22,764 அழைப்புகள் தீயணைப்புப்படைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.                  

2017 ஆம் ஆண்டில், தீயணைப்புப்படைக்கு மொத்தம் 4,454 அழைப்புகள் வந்துள்ளது. இது 2018-ல் 4,959 ஆகவும், 2019-ல் 5,324 ஆகவும் உயர்ந்தது. இருப்பினும்,  தீ விபத்து தொடர்பான அழைப்புகள்  2020-ல் 4,512 ஆகவும், 2021-ல் 3,515 ஆகவும் குறைந்தது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, ஊரடங்கு காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தீயணைப்படைக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில், பல வணிகப் பிரிவுகள் மூடப்பட்டதால், தீ விபத்துகள் குறைந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பகுதிகளில் ஏற்பட்ட பல தீ விபத்துகள் காரணமாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்ததால், தீ விபத்துகள் குறைந்துவிட்டன என்று தீயணைப்புப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story