பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்க முன்னுரிமை - மோடி தகவல்


பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்க முன்னுரிமை - மோடி தகவல்
x
தினத்தந்தி 24 Jan 2022 7:24 PM GMT (Updated: 2022-01-25T00:54:35+05:30)

மத்திய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு வளர்ச்சி முன்முயற்சியிலும் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்க ஆழ்ந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

புதுடெல்லி, 

தேசிய பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேசிய பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு வளர்ச்சி முன்முயற்சியிலும் பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்க ஆழ்ந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண் சக்தியை வலுப்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளை வலுப்படுத்த தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒரு நல்ல வாய்ப்பாகும். பல்வேறு துறைகளில் பெண் குழந்தைகள் நிகழ்த்திய அபரிமிதமான சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் இது பார்க்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் கண்ணியத்தை உறுதி செய்வதிலும், அவர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பதிலும் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story