காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 135 பயங்கரவாதிகள் எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. தகவல்


காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 135 பயங்கரவாதிகள் எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. தகவல்
x
தினத்தந்தி 25 Jan 2022 12:26 AM GMT (Updated: 2022-01-25T05:56:11+05:30)

பாகிஸ்தான் பகுதியில் காஷ்மீருக்குள் ஊடுருவ 135 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ராஜா பாபு சிங் கூறினார்.

ஸ்ரீநகர், 

பாகிஸ்தான் பகுதியில் காஷ்மீருக்குள் ஊடுருவ 135 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ராஜா பாபு சிங் கூறினார்.

ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சண்டைநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபிறகு, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பொதுவாக அமைதி நிலவுகிறது.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்திருக்கிறது.

2019-ம் ஆண்டின் 130 பேர், 2020-ம் ஆண்டின் 36 பேருடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் 31 பேர்தான் ஊடுருவியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டில் நடந்த 58 ஊடுருவல் முயற்சிகளில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 21 பேர் திரும்பிச் சென்றிருக்கிறார்கள், ஒருவர் சரணடைந்திருக்கிறார்.

மேலும், 3 ஏ.கே.47 துப்பாக்கிகள், 6 கைத்துப்பாகிகள், ஆயிரத்து 71 வெடிபொருட்கள், 20 கையெறிகுண்டுகள், 2 வெடிகுண்டுகள் மற்றும் ரூ.88 கோடி மதிப்புள்ள 17.3 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஊடுருவலை முற்றிலுமாக தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த விஷயத்தில் ராணுவம், எல்லை பாதுகாப்பு படை இடையே நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது’ என்று கூறினார்.

Next Story