கேரள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது


கேரள ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது
x
தினத்தந்தி 25 Jan 2022 8:36 AM GMT (Updated: 2022-01-25T14:06:49+05:30)

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கொலை வழக்கில் சம்பத்தபட்ட முக்கிய குற்றவாளியான எஸ்.டி.பி.ஐ நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள எலப்புலி பகுதியை சேர்ந்தவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சஞ்சித் (27).இவர், கடந்தாண்டு நவம்பர் 15-ம் தேதி தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கும்பல் ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்டார். 

வாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சஞ்சித் சம்பவ இடத்திலேயே மனைவியின் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் பி.எஃப்.ஐ அமைப்புகளை சேர்ந்த 9 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சஞ்சித் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி முகமது ஹரோனை போலீசார் நேற்று கைது செய்தனர். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சஞ்சித் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 


Next Story