இராணுவ வீரர்கள் கடும் குளிரிலும் ,வெப்பத்திலும் , தாய் நாட்டை காக்கின்றனர் : ஜனாதிபதி பெருமிதம்


இராணுவ வீரர்கள் கடும் குளிரிலும் ,வெப்பத்திலும் , தாய் நாட்டை காக்கின்றனர் : ஜனாதிபதி பெருமிதம்
x
தினத்தந்தி 25 Jan 2022 2:21 PM GMT (Updated: 2022-01-25T20:04:19+05:30)

நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்

புது டெல்லி,

நாட்டில் குடியரசு தின விழா நாளை  கொண்டாடப்படவுள்ளது. குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  உரையாற்றினார் 

இந்த உரையில் அவர் கூறிய முக்கிய அம்சங்கள் ;

*நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

*விடுதலைக்காக போராடிய கதாநாயகர்களை நினைவு கூரும் வாய்ப்பாக குடியரசு தினம் விளங்குகிறது.

*இன்று, நமது ராணுவ வீரர்களும், பாதுகாப்புப் படையினரும் தேசப் பெருமிதத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். இமயமலையின் தாங்க முடியாத குளிரிலும், பாலைவனத்தின் கடும் வெப்பத்திலும், குடும்பத்தை விட்டு வெகு தொலைவில், தாய்நாட்டைக் காத்து வருகின்றனர்.

*கடந்த ஆண்டு, நமது விளையாட்டு வீரர்களும் ஒலிம்பிக்கில் தங்கள் முத்திரையைப் பதித்தனர்.இந்த இளம் சாம்பியன்களின் தன்னம்பிக்கை இன்று கோடிக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. 

*கொரோனாவால்  கொண்டாட்டம் குறைவானாலும், உணர்வுகள் சக்தியுடையதாகவே உள்ளது .

*கொரோனா பேரிடரில் இருந்து ஏராளமானோரின் உயிரைக் காப்பாற்றியது ஆறுதலாக உள்ளது.
*ஸ்டார்ட் அப் சூழலை மிகத் திறமையாக பயன்படுத்தி, நமது இளம் சுய தொழில் முனைவோர் முத்திரையை பதித்துள்ளனர் .

*உலகில் புதுமையான பொருளாதாரத்தைக் கொண்ட 50 நாடுகளில் இந்தியாவும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது 

*நவீன ராணுவ திறன்கள் மூலம் உலகின் சக்திவாய்ந்த கப்பற்படை கொண்ட நாடாக இந்தியாவும் மாறியுள்ளது.

Next Story