ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்பட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது


ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்பட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது
x
தினத்தந்தி 25 Jan 2022 2:52 PM GMT (Updated: 25 Jan 2022 3:55 PM GMT)

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் விவரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்கிற்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களின் விவரம்;

கலைத் துறையில் பிரபா ஆத்ரே, இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் உத்தரப் பிரதேசத்தின் ராதேஷ்யாம் கெம்கா (மறைவுக்குப் பின்), சிவில் சர்வீஸ் துறையில் ஜெனரல் பிபின் ராவத் (மறைவுக்குப் பின்), பொது சேவை பிரிவில் கல்யாண் சிங் (மறைவுக்குப் பின்) பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story