கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் ஒரே நாளில் 52 பேர் உயிரிழப்பு


கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் ஒரே நாளில் 52 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 Jan 2022 3:36 PM GMT (Updated: 25 Jan 2022 3:36 PM GMT)

கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாக பதிவாகியுள்ளது. எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை 52 ஆக பதிவாகி அதிரவைத்துள்ளது.  கர்நாடகாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: -

கர்நாடகத்தில்  ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 54 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 41 ஆயிரத்து 400 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதுவரை 6 கோடியே 85 லட்சத்து 911 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு உள்ளது. அதில் 36 லட்சத்து 5 ஆயிரத்து 508 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 38 ஆயிரத்து 666 பேர் கொரோனாவுக்கு இறந்து உள்ளனர். 

தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 53 ஆயிரத்து 93 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 32 லட்சத்து 16 ஆயிரத்து 70 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 3 லட்சத்து 50 ஆயிரத்து 472 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

Next Story