கார் வாங்க சென்ற விவசாயி அவமதிக்கப்பட்ட விவகாரம்; ஆனந்த் மஹிந்திரா கருத்து + "||" + Anand Mahindra's Message After Farmer's Humiliation At SUV Showroom
கார் வாங்க சென்ற விவசாயி அவமதிக்கப்பட்ட விவகாரம்; ஆனந்த் மஹிந்திரா கருத்து
மஹிந்திரா கார் ஷோரூமில் சரக்கு வேன் வாங்க சென்ற, விவசாயி கெம்பேகவுடா அந்த ஷோரூம் ஊழியர்கள் அவமதித்து இருந்தனர்.
மும்பை,
கர்நாடகாவில் உள்ள துமகூருவில் உள்ள மஹிந்திரா கார் ஷோரூமில் சரக்கு வேன் வாங்க சென்ற, விவசாயி கெம்பேகவுடா அந்த ஷோரூம் ஊழியர்கள் அவமதித்து இருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து மஹிந்திரா கார் நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
அனைத்து தரப்பினரையும் முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்பதே மஹிந்திரா நிறுவனத்தின் நோக்கம். அனைத்து தனிநபர்களின் கண்ணியத்தை காப்பது எங்களின் முக்கிய கொள்கை. இதில் ஏதாவது சிறிய தவறு ஏற்பட்டாலும் கூட அதை உடனடியாக சரிசெய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.