உ.பி.யை காட்டாட்சிக்கு தள்ளிய எதிர்கட்சியினர்: மாயாவதி குற்றச்சாட்டு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Jan 2022 9:34 PM GMT (Updated: 2022-01-26T03:04:56+05:30)

பகுஜன் சமாஜ் கட்சியை தவிர எல்லா கட்சிகளும், உத்தரபிரதேசத்தை காட்டாட்சிக்கு தள்ளி விட்டதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

லக்னோ, 

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை தவிர எல்லா கட்சிகளின் அரசுகளும் மக்களை தொந்தரவுக்கு உள்ளாக்கி விட்டன. அரசியலை கிரிமினல் மயமாக்கி விட்டனர். தங்கள் கட்சி குண்டர்களையும், மாபியாக்களையும் பாதுகாப்பதையே நோக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் உத்தரபிரதேசத்தை காட்டாட்சிக்கு தள்ளி விட்டனர். மாநிலத்தை பின்தங்கிய நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். இருந்தாலும் அவர்களின் வாய்ஜாலம் தொடர்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Next Story