கர்நாடகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது


கர்நாடகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது
x
தினத்தந்தி 25 Jan 2022 10:36 PM GMT (Updated: 25 Jan 2022 10:36 PM GMT)

குடியரசு தினத்தையொட்டி கர்நாடகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது.

பெங்களூரு,

ஆண்டுதோறும் குடியரசு, சுதந்திர தினத்தையொட்டி சிறப்பாக பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு கர்நாடக அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதுபோல இந்த ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 19 போலீஸ்காரர்களுக்கு அரசு சார்பில் விருது வழங்கப்பட உள்ளது. அதன்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான மாநில உள்துறை இயக்குனர் தயானந்த், இணைய வழி குற்றத்தடுப்பு கூடுதல் டி.ஜி.பி. ஹிதேந்திரா ஆகியோருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது.

பெங்களுருவில் போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் ரவிகாந்தே கவுடா ஐ.ஏ.எஸ்., போலீஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதுபோல மைசூருவில் உள்ள கர்நாடக மாநில ஆயுதப்படை 5-வது பட்டாலியன் கமாண்டண்ட் ஜனார்த்தன், பெங்களூரு அல்சூர் உதவி போலீஸ் கமிஷனர் குமாரா, மைசூரு மாவட்டம் உன்சூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிபிரசாத், ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடப்பா நாயக் ஒலேகர்.

பெங்களூரு ஆனேக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லேசய்யா, பெங்களூரு சி.ஐ.டி., சைபர் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு யஷ்வந்த குமார், கலபுரகியில் குற்றப்பிரிவு ஆவணங்கள் பாதுகாப்பு பிரிவில் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றும் கங்காதர் ஆகியோரும் போலீஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூருவில் கே.எல். ஏ.வில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, பெங்களூருவில் சி.ஐ.டி.யில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சேகர், கர்நாடக மாநில ஆயுதப்படை முதலாவது பட்டாலியனில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் சிம்சி, பெலகாவியில் மாவட்ட ஆயுத ரிசர்வ் படை அதிகாரி தஸ்தகீர் முகமது ஹனீப், பெங்களூருவில் குற்றப்பிாிவில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் முனிராஜய்யா.

கதக்கில் மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவ ரும் மாருதி சங்கர் ஜோகதண்டகர், மங்களூரு கிழக்கு போலீஸ் நிலையத்தின் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விஜயகஞ்சன், பெலகாவி காடேபஜார் போலீஸ் நிலைய தலைமை ஏட்டு சங்கர்ராவ் மாருதிராவ் சிண்டே.

மைசூருவில் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் லிங்கராஜப்பா, பெங்களூருவில் உள்ள மாநில உள்துறையில் ஏ.எச்.சி.யாக பணியாற்றும் வெங்கடேசப்பா ஆகியோரும் போலீஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story