பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் ராணுவ தளபதி திடீர் சந்திப்பு


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் ராணுவ தளபதி திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 26 Jan 2022 4:15 PM GMT (Updated: 26 Jan 2022 4:15 PM GMT)

பாகிஸ்தானில் ஊழலை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதாக இம்ரான் கான் மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இஸ்லமபாத், 

பாகிஸ்தானில் ஊழலை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதாக இம்ரான் கான் மீது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த சூழலில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல்  கமர் ஜாவேத் பஜ்வா இம்ரான் கானை திடீரென சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின் போது அலுவல் சார்ந்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. தலைநகர் இஸ்லமாபாத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

பாகிஸ்தானில் ஊழல் அதிகரித்து வருவதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அறிக்கை வெளியிட்ட  மறு  நாளே இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஊழல் கண்காணிப்பு அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஊழல் அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் 16 இடங்கள் பின் தங்கி 140 இடத்தில் உள்ளது. 


Next Story