காஷ்மீர்: லால் சவுக் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு பின் ஏற்றப்பட்ட இந்திய தேசியக்கொடி...!


காஷ்மீர்: லால் சவுக் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு பின் ஏற்றப்பட்ட இந்திய தேசியக்கொடி...!
x
தினத்தந்தி 26 Jan 2022 10:12 PM GMT (Updated: 26 Jan 2022 10:17 PM GMT)

காஷ்மீரின் ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் உள்ள மணிக்கூண்டு டவரில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

ஸ்ரீநகர்,

நாடு முழுவதும் நேற்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் குடியரசு தின விழா வெகுவாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பிரபலமான லால் சவுக் பகுதியில் உள்ள மணிக்கூண்டு டவரில் 30 ஆண்டுகளுக்கு பின் நேற்று இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 1992 ஆம் ஆண்டு பயங்கரவாத ஆதிகம் அதிகமாக இருந்த நேரத்தில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் லால் சவுக் பகுதியில் உள்ள மணிக்கூண்டு டவரில் தேசியக்கொடி ஏற்றினர். அதன்பின்னர், லால் சவுக் மணிக்கூண்டு டவரில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்படாமல் இருந்தது.

தற்போது, 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய தேசியக்கொடி லால் சவுக் மணிக்கூண்டு டவரில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதை அங்கு கூடிய இருந்த பொதுமக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.    



Next Story