குடியரசு தினம்:பெண் பாலியல் பலாத்காரம் தலைமுடியை வெட்டி ; செருப்புமாலை அணிந்து ஊர்வலம் + "||" + Kidnapped, gang-raped, hair chopped: 4 arrested after assault on Delhi woman on R-Day
குடியரசு தினம்:பெண் பாலியல் பலாத்காரம் தலைமுடியை வெட்டி ; செருப்புமாலை அணிந்து ஊர்வலம்
நேற்று குடியரசு தினத்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தலைமுடியை வெட்டி செருப்புமாலை அணிந்து ஊர்வலமாக அழைத்து வரபட்டார்.
புதுடெல்லி
நேற்று குடியரசு தினத்தன்று, டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டார். இது தொடர்பாக நான்கு குற்றவாளிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக தெருவில் அழைத்து வரப்பட்டு உள்ளார். அப்போது உள்ளூர்வாசிகள் ஆரவாரம் செய்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் தங்கை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு உள்ளனர்.
பாதிக்கபட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து டெல்லி போலீஸ் கூறியதாவது:-
ஷாஹ்தரா மாவட்டத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது தொடர்பாக போலீசார் நான்கு குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டவருக்கு அனைத்து உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என கூறி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், ஆணையம் டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பும் என கூறி உள்ளார். சட்டவிரோத மது விற்பனையாளர்களால் பெண் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.