டெல்லியில் வார இறுதி ஊரடங்கு ரத்து ; இரவு ஊரடங்கு நீடிக்கும்


டெல்லியில் வார இறுதி ஊரடங்கு ரத்து ; இரவு ஊரடங்கு நீடிக்கும்
x
தினத்தந்தி 27 Jan 2022 8:51 AM GMT (Updated: 2022-01-27T14:21:38+05:30)

டெல்லியில் வார இறுதி நாட்களில் அமலில் இருந்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு  கடந்த சில நாட்களாக பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இதனால் அங்கு அமலில் உள்ள வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இரவு  ஊரடங்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

டெல்லி அரசுக்கும், கவர்னருக்கும் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

டெல்லியில் வார இறுதி ஊரடங்கு ரத்து ; இரவு ஊரடங்கு நீடிக்கும். டெல்லியில் 200 பேர் திருமணத்திற்கு அனுமதி; பார்கள், உணவகங்கள், தியேட்டர்கள் 50 சதவீத திறனுடன் திறக்கப்படும். பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பள்ளிகள் திறப்பு தொடர்பாக அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என கூறி உள்ளனர்.

Next Story