இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம்


இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 27 Jan 2022 6:01 PM GMT (Updated: 2022-01-27T23:31:19+05:30)

இமாச்சல பிரதேசத்தில் இன்று ரிக்டர் 3.4 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மாவாடத்தில் இருந்து 63 கி.மீ. வடக்கு பகுதியில் இன்று இரவு 9.13 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிகடர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேலும் அருகில் உள்ள சம்பா மாவட்டம் வரை நில அதிர்வு உணரப்பட்டதாகவும், லேசான அளவில் நில அதிர்வு ஏற்பட்ட காரணத்தால் குடியிருப்பு பகுதிகளில் அதிக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story