மராட்டியத்தில் 12 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் ரத்து - சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு


மராட்டியத்தில் 12 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் ரத்து -  சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 28 Jan 2022 7:23 AM GMT (Updated: 28 Jan 2022 7:23 AM GMT)

மராட்டிய பா.ஜ.க.வைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டதை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

புதுடெல்லி

மராட்டிய சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஆண்டு நடந்தது. இதில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் எதிர்கட்சியைச் சேர்ந்த பாஜக., எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் பேச்சைக் கேட்காமல் கூச்சலிட்டுஅவரைத் தாக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் 12 எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி, சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் கொண்டுவந்து தீர்மானத்தின் படி பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஞ்சய் குடே, ஆஷ்ஸ் ஷெல்லர், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அடுல் பாட்கால்கர், பராக் அலாவனி, ஹரிஷ் பிம்பாலே, யோகேஷ் சாகர், ஜெய் குமார் ராவத், நாராயண் குச்சே, ராம் சத்புதே, பண்டி பாங்டியா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

இதைத் தொடர்ந்து  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், 12 பாஜக எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்து வெளியிட்ட தீர்மானம் தன்னிச்சையாகவும் அரசிலமைப்பிற்க்கு எதிராகவும் வெளியிட்டதாகக் கூறி அதை ரத்து செய்துள்ளது. அதே நேரத்தில் இவ்வாறு இடைநீக்கம் செய்வது அவை வெளியேற்றத்தை விட மோசமானது” எனக்குறிப்பிட்டுள்ளது. 

Next Story