அகிலேஷ் யாதவ் ஹெலிகாப்டர் டெல்லியில் இருந்து முசாபர்நகருக்கு பறக்க தடை


அகிலேஷ் யாதவ் ஹெலிகாப்டர் டெல்லியில் இருந்து முசாபர்நகருக்கு பறக்க தடை
x
தினத்தந்தி 28 Jan 2022 12:28 PM GMT (Updated: 2022-01-28T17:58:09+05:30)

டெல்லியில் இருந்து உத்தரபிரதேச முசாபர்நகருக்கு அகிலேஷ் யாதவின் ஹெலிகாப்டர் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி

உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந்தேதி முதல் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளன.

இந்த நிலையில் உத்தரபிரதேச முசாபர்நகருக்கு ஹெலிகாப்டர் புறப்பட அனுமதிக்கப்படாததால் டெல்லியில் சிக்கித் தவிப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அகிலேஷ் யாதவ் இந்தியில் வெளியிட்டுள்ள டுவிட்டில் கூறி இருப்பதாவது:-

"எனது ஹெலிகாப்டர் எந்த காரணமும் இல்லாமல், முசாபர்நகருக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. டெல்லியில் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளது, அதேசமயம் பாஜகவின் உயர்மட்ட தலைவர் ஒருவர் இங்கிருந்து பறந்து சென்றுள்ளார். இது ஒரு மோசமான சதி. தோல்வியடைந்த பாஜக," என கூறி உள்ளார்.Next Story